THIRUKURAL
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு.
செயற்கரிய யாவுள நட்பின் அதுபோல்
வினைக்கரிய யாவுள காப்பு.
அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை
ஆரிருள் உய்த்து விடும்.
ஒழுக்கம் விழுப்பந் தரலான் ஒழுக்கம்
உயிரினும் ஓம்பப் படும்.
இன்சொலால் ஈரம் அளைஇப் படிறுஇலவாம்
செம்பொருள் கண்டார்வாய்ச் சொல்.
உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே
இடுக்கண் களைவதாம் நட்பு.
எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
செய்ந்நன்றி கொன்ற மகற்கு.
அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை
இகழ்வார்ப் பொறுத்தல் தலை
அன்புடைமை ஆன்ற குடிப்பிறத்தல் இவ்விரண்டும்
பண்புடைமை என்னும் வழக்கு.
"முஸ்தாக்" இந்த பெயரை கேட்கும் போதே
அந்த இனிய இலங்கை உச்சரிப்பு கொண்ட குரல்
எங்கள் காதுகளில் ஒளிக்கும்.
அதுவும் அவர் தடையில்லா அருவியை போல பேசும் விதம் எல்லோரையும் ஒருமுறை நின்று கேட்க சொல்லும்.
பல நேரங்களில் அவர் சொல்லும் சில வரி கவிதைகள்
பல அர்தங்களை சுமந்து நிற்கும்.
MTQ என்ற அடையாளப்பெயர் கொண்ட இவருக்கு
TN6 அறையில் நல்ல நண்பன் என்ற மதிப்பும் உண்டு.
பெண்களின் மனதில் தன் குரலால் கனவு கண்ணன் என்றும்
லட்டு பையன் என்றும் உரு பெற்றிருப்பவர் எங்கள் முஷ்தாக்....
No comments:
Post a Comment