THIRUKURAL

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு.

செயற்கரிய யாவுள நட்பின் அதுபோல்
வினைக்கரிய யாவுள காப்பு.

அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை
ஆரிருள் உய்த்து விடும்.

ஒழுக்கம் விழுப்பந் தரலான் ஒழுக்கம்
உயிரினும் ஓம்பப் படும்.


இன்சொலால் ஈரம் அளைஇப் படிறுஇலவாம்
செம்பொருள் கண்டார்வாய்ச் சொல்.


உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே
இடுக்கண் களைவதாம் நட்பு.


எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
செய்ந்நன்றி கொன்ற மகற்கு.


அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை
இகழ்வார்ப் பொறுத்தல் தலை


அன்புடைமை ஆன்ற குடிப்பிறத்தல் இவ்விரண்டும்
பண்புடைமை என்னும் வழக்கு.

Nanbar g_i_r_i

எந்த விதமான அடை மொழியும் இல்லாமல் அன்று முதல் இன்று வரை தன் பெயரை மட்டுமே தன் அடையாளமாக சுமந்து வரும் எங்கள் கிரி அண்ணா எங்கள் அறையின் மூத்த தோழர்களில் முக்கிய தோழர் என்றே குறிப்பிடலாம்.

அண்ணா என்ற ஒற்றை மந்திர சொல்லால் இவரின் ஒட்டுமொத்த பாசத்தயும் வென்றுவிடலாம்.
அப்படிப்பட்ட பாசக்கார நண்பர் எங்கள் கிரி அண்ணா.


பல நேரங்களில் ஆழ் கடலின் அமைதியுடன் இருக்கும் எங்கள் கிரி அண்ணா மிக சில நேரங்களில் மட்டும் ஆர்பரிக்கும் அலை கடலாகவும் மாறி விடுவார்.
சத்தமில்லாமல் பல சமூக சேவைகளை செய்து வரும் இளகிய உள்ளம் படைத்தவர் எங்கள் கிரி அண்ணா.

No comments: