THIRUKURAL

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு.

செயற்கரிய யாவுள நட்பின் அதுபோல்
வினைக்கரிய யாவுள காப்பு.

அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை
ஆரிருள் உய்த்து விடும்.

ஒழுக்கம் விழுப்பந் தரலான் ஒழுக்கம்
உயிரினும் ஓம்பப் படும்.


இன்சொலால் ஈரம் அளைஇப் படிறுஇலவாம்
செம்பொருள் கண்டார்வாய்ச் சொல்.


உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே
இடுக்கண் களைவதாம் நட்பு.


எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
செய்ந்நன்றி கொன்ற மகற்கு.


அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை
இகழ்வார்ப் பொறுத்தல் தலை


அன்புடைமை ஆன்ற குடிப்பிறத்தல் இவ்விரண்டும்
பண்புடைமை என்னும் வழக்கு.

t_a_m_i_l p_o_n mozhligal

  • ஒரு நாளுமில்லாமல் திருநாளுக்குப் போனால் , திருநாளும் வேரு நாளாச்சுது
  • ஒரு நாளும் சிரிக்காதவன் திருநாளில் சிரித்தான் , திருநாளும் வேறு நாளாச்சுது .
  • அறைக்காசை ஆயிரம் பொன்னக்குகிறவளும் பெண்சாதி , ஆயிரம் பொன்னை அறைக்காசு ஆக்கு கிறவளும் பெண்சாதி.
  • பங்குனி என்று பருக்கிறதுமில்லை, சித்திரை என்றும் சிறுக்கிறுதுமில்லை.
  • குறையச் சொல்லி , நிறைய அள
  • அஞ்சும் மூன்றும் உண்டானால் , அறியாப்பெண்ணும் சமைக்கும்.
  • வெறும் வாய் மெல்லுகிற அம்மையாருக்கு அவல் அகப்பட்டது போல .
  • பந்தியிலே வேண்டாம் வேண்டாம் என்றாலும் , இலை போத்தல் இலை போத்தல் என்கிறான்
  • உழுகிற நாளில் ஊருக்குப் போய், அறுக்கிற நாளில் அரிவாள் கொண்டு வந்தது போல.
  • கஞ்சி கண்ட இடம் கைலாசம் , சோறு கண்ட இடம் சொர்க்கம் .
  • சூடு கண்ட பூனை அடுப்பங்கரையில் சேராது .
  • வீட்டுக்கு செல்வம் மாடு , தோட்டச் செல்வம் முருங்கை.
  • கடுகு களவும் களவுதான் , கற்புரம் களவும் களவு தான்.
  • கூத்தாடி கிழக்கே பார்த்தான் , கூலிக்காரன் மேற்கே பார்த்தான்.
  • பாம்பாடிக்குப் பாம்பிலே சாவு , கள்ளனுக்கு களவிலே சாவு .
  • கொள்ளும் வரைக்கும் கொண்டாட்டம் , கொண்ட பிறகு திண்டாட்டம் .
  • திருவாக்குக்கு எதிர்வாக்குக்கு உண்டா?
  • எருமை வாங்கும் முன் நெய் விலை கூறுகிறதா ?

No comments: